Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

வயிற்றில் இருக்கும் கருவின் வயதை கண்டறியும் ஏஐ மாடலை உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ்- ஃபரிதாபாத் ஆய்வாளர்கள்!

ஐஐடி மெட்ராஸ் மற்றும் பாரிதாபாத்தின் டிரான்ஸ்நேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட், இணைந்து, கர்ப்பினி பெண்களின் இரண்டாவது, மூன்றாவது கட்ட கர்ப காலத்தில் கருவின் வயதை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

வயிற்றில் இருக்கும் கருவின் வயதை கண்டறியும் ஏஐ மாடலை உருவாக்கிய  ஐஐடி மெட்ராஸ்- ஃபரிதாபாத் ஆய்வாளர்கள்!

Tuesday March 05, 2024 , 2 min Read

ஐஐடி மெட்ராஸ் மற்றும் பாரிதாபாத்தின் டிரான்ஸ்நேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட், இணைந்து, கர்ப்பிணிப் பெண்களின் இரண்டாவது, மூன்றாவது கட்ட கர்ப காலத்தில் கருவின் வயதை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

குழந்தை பிறப்பு தொடர்பான பல்துறை மேம்பட்ட ஆய்வு திட்டமான கர்ப்பிணி (GARBH-Ini) கீழ் உருவாக்கப்பட்ட இந்த மாதிரி இந்திய பெண்களுக்கான பிரத்யேக மாதிரி என்பது குறிப்பிடத்தக்கது.

IIT

கர்ப்பிணி பெண்களின் நலன் காக்க மற்றும் பிரசவ நாளை கணிக்க, துல்லியமாக கருவின் வயதை கண்டறிவது அவசியம். Garbhini-GA2 எனும் இந்த மாதிரி, இந்திய மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், மேற்கத்திய மக்கள்தொகை தரவுகள் கொண்டு உருவாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் கருவின் வயது கண்டறியப்படுகிறது. இந்திய மக்கள்தொகையில் கருவின் வளர்ச்சியில் வேறுபாடு இருக்கலாம் என்பதால் இந்த மாதிரி சிக்கலானது. புதிதாக உருவாக்கப்படுள்ள கர்பினி- ஜிஏ2 மாதிரி, இந்திய மக்கள்தொகைக்கான சிசுவின் வயதை தீர்மானித்து, பிழை வாய்ப்பை மூன்று மடங்கு குறைக்கிறது. இது மகப்பேறு சிகிச்சையை மேம்படுத்த உதவும்.

“உயிரிநுட்பத் துறையின் முன்னணி திட்டமாக இது விளங்குகிறது. கரு வயதை மக்கள்தொகை தன்மைக்கு ஏற்ப அறியும் மாதிரியை உருவாக்குவது முக்கியமானது. இந்த மாதிரி நாடு தழுவிய அளவில் சோதிக்கப்பட்டு வருகிறது,” என இந்திய அரசின் உயிரிநுட்ப துறை செயலர் டாக்டர்.ராஜேஷ் கோக்லே கூறியுள்ளார்.
IIT

டாக்டர்.ஹிமான்ஷு சினா, ஜோதி மேத்தா உயிரி அறிவியல் கழக உதவி பேராசிரியர் மற்றும் ஐஐடி மெட்ராஸ் டாக்டர்.ஷின்ஜினி பட்னாகர் உள்ளிட்டோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் லான்சட் தெற்காசிய ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

“ஐஐடி மெட்ராஸ், இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மருத்துவ பிரச்சனைகள் ஆய்வில் பங்களித்து வருகிறது. இந்த நோக்கில், THSTI அமைப்புடன் இணைந்து செயல்பட்டுள்ளோம். இந்த மாதிரி மேற்கத்திய மாதிரிகளை விட அதிக பலன் அளிக்கும்,” என்று திட்ட ஒருங்கிணைப்பாளரான ஹிமான்ஷு சின்ஹா கூறியுள்ளார்.

இந்த ஆய்வு, குருகிராம் சிவில் மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை- தில்லி, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கழகம் ஆகிய மருத்துவமனைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசின் உயிரிநுட்ப துறையின் முன்னணி திட்டமாக இது அமைகிறது. உயிரிநுட்ப தொழில் ஆய்வு உதவி கவுன்சிலின் கிராண்ட் சாலஞ்ச் மூலம் நிதி அளிக்கப்பட்டது.

ஐஐடி மெட்ராசின், ராபர்ட் பாஷ் தரவு அறிவியல் மற்றும் ஏஐ மையம், மற்றும் (IBSE) ஆகிய அமைப்புகளும் நிதி அளித்தன.


Edited by Induja Raghunathan