பேச்சு வழக்கு மொழிகளில் சாட்பாட் சேவையை அறிமுகம் - ‘Guvi’-யின் புதுமையான மொழி மாதிரி!
கல்வி நுட்ப நிறுவனம் குவி (GUVI ) பிராந்திய மொழிகளின் பேச்சு வழக்குகளில் கற்பவர்களை மையமாகக் கொண்ட பெரிய மொழி மாதிரியை (LLM) அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த மொழி மாதிரி பயனர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.
கல்வி நுட்ப நிறுவனம் குவி (
) பிராந்திய மொழிகளின் பேச்சு வழக்குகளில் கற்பவர்களை மையமாகக் கொண்ட பெரிய மொழி மாதிரியை (LLM) அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த மொழி மாதிரி பயனர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.ஏஐ திறன் கொண்ட சாட்ஜிபிடி அறிமுகம் ஆனதை அடுத்து, அதன் அடிப்படையாக அமைந்துள்ள மொழி மாதிரி நுட்பம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாட்ஜிபிடி தாய் நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மென், மொழி மாதிரிகளில் பயிற்சி அளிப்பதில் தங்களோடு போட்டியிட முடியாது என்றும், இந்தியாவில் இத்தகைய மொழி மாதிரியை உருவாக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, சில இந்திய நிறுவனங்கள் சாட்ஜிபிடிக்கு நிகரான மொழி மாதிரிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் குவி, பல்வேறு வகை சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது.
“பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையில் தான் உண்மையான புதுமையாக்கம் இருப்பதாக குவி உறுதியாக நம்புகிறது. ஒரே மாதிரியான பயிற்சி மொழி மாதிரிகளை உருவாக்கும் பயனற்ற முயற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக குவி, பல்வேறு வகை சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. சாம் ஆல்ட்மெனின் சவாலை டெக் மகிந்திரா சி.இ.ஓ. ஆனந்த் மகிந்திரா உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. ஏனெனில், ஒரே மாதிரியை உருவாக்குவதில் நிஜ உலக பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க முடியாது,” என்று குவி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அருண் பிரகாஷ் கூறியுள்ளார்.
மேலும், அண்மையில் வெளியிட்ட லிங்க்டுஇன் பதிவில் அருண் பிரகாஷ், ஓலா நிறுவனத்தின் ஏஇ சாட்பாட் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். நிறுவனங்கள் தன்முனைப்பு சார்ந்த சவால்களில் ஈடுபடும் போது, இது போன்ற தோல்விகள் தான் ஏற்படும் என்றும், புதுமையாக்கத்திற்கான வாய்ப்பை தவறவிட நேரும் என்றும் கூறியிருந்தார்.
தற்போது நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மொழி மாதிரி, பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பேச்சு வழக்கில், மொழி மாதிரிகளுடன் தொடர்பு கொள்ள வழி செய்கிறது. இது கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும்.
2.5 மில்லியன் பயனாளிகள் கொண்ட குவி, எசிஎல் குழுமத்தின் பிராந்திய கல்வி நுட்ப நிறுவனம், இந்த மொழி மாதிரி சார்ந்த பயிற்சி வகுப்புகள் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் கல்வி இலக்கை நம்பிக்கையோடு அணுக வழி செய்யும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது குவி எல்.எல்.எம். தமிழ், இந்தி., தெலுங்கு , கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அறிமுகம் ஆகியுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பிராந்திய மொழிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
“இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் மொழிகளில் பரந்துபட்ட தன்மையை அங்கீகரிக்கிறோம். சாட்ஜிபிடி மற்றும் பேச்சு வழக்கு தரவுகள் பட்டியல் கொண்டு, இந்தியர்களின் பேச்சு வழக்கை புரிந்து கொண்டு ஏஐ பதில் அளிப்பதை சாத்தியமாக்கியிருக்கிறோம்,,” என்று அருண் பிரகாஷ் கூறியுள்ளார்.
Guvi, மென்பொருள் துறையில் பணி நாடுபவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் ஆன்லைன் மேடை, ஐடி திறன் பெற வழி செய்கிறது.
குவியின் மொழி மாதிரி அளிக்கும் வசதிகள் வருமாறு:
ஆங்கில பயிற்சி வீடியோனை பதிவேற்றி அதை பேச்சு வழக்கில் மொழி மாற்றம் செய்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட பயனாளிகள் தன்மைக்கேற்ற கற்றல் அனுபவம்.
குவி மொழி மாதிரியுடன் தொடர்பு கொள்ள தாய் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
மொழி தடை இல்லாமல் கற்றல் இலக்குகளை அணுகுவதற்கான வசதி.
குவி எல்.எல்.எம் சேவையை உள்ளூர் மொழியில் அணுக பதிவு செய்து கொள்ளவும்: - https://ai.guvi.in/
Edited by Induja Raghunathan